/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கர்மயோகி பாரத் திறன் மேம்பாட்டு ஆணையம் புதுச்சேரி அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்
/
கர்மயோகி பாரத் திறன் மேம்பாட்டு ஆணையம் புதுச்சேரி அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்
கர்மயோகி பாரத் திறன் மேம்பாட்டு ஆணையம் புதுச்சேரி அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்
கர்மயோகி பாரத் திறன் மேம்பாட்டு ஆணையம் புதுச்சேரி அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்
ADDED : டிச 07, 2024 07:16 AM

புதுச்சேரி: டில்லியில் உள்ள கர்மயோகி பாரத் திறன் மேம்பாட்டு ஆணையம், புதுச்சேரி அரசு நிர்வாக சீர்த்திருத்தத்துறை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி சன்வே ஓட்டலில் நேற்று நடந்தது.
கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
தொடர்ந்து கவர்னர் பேசியதாவது;
ராணுவத்தில் ஒவ்வொரு கட்டத்திலும், பயிற்சி அளிக்கப்பட்டு தேர்வு எழுதினால் தான் பதவி உயர்வு கிடைக்கும். அரசு பணியில் அப்படி இல்லை. ஒரு முறை அரசு பணிக்கு தேர்வாகி விட்டால், அடுத்த 35 ஆண்டுகள் பணியில் இருக்கலாம்.
தற்போது உலகம் மாறிவிட்டது. 10ம் வகுப்பு படிக்கும் தங்களின் குழந்தைகளின் அறிவுத்திறன் எப்படி உள்ளது என்பதை கவனித்து பாருங்கள். அடுத்த தலைமுறைக்கு என்ன தகுதி தேவையோ அந்த தகுதி நமக்கும் இருக்க வேண்டும்.
கர்மயோகி பாரத் திறன்மேம்பாட்டை பிரதமர் மோடி அரசு அதிகாரிகள், ஊழியர்களுக்கு செயல்படுத்தி உள்ளார். அரசு பணியாளர்கள் இந்த பயிற்சியால் திறன் மேம்படுத்தப்பட்டு, அதை பயன்படுத்தி கொள்வதே புது நிர்வாக நடைமுறை.
அனைவரும் ஆன்லைன் பயிற்சியில் பதிவு செய்து நிறைவு செய்ய வேண்டும். நாடு முழுதும் செயல்படுத்தி உள்ள இத்திட்டம் புதுச்சேரியிலும் அமலாகிறது.
இந்நிகழ்வின் விளக்க நிகழ்ச்சிக்கு, பல அரசு மூத்த செயலர்கள் வரவில்லை.
நிகழ்ச்சிக்கு வராதவர்கள் எப்படி தன் ஊழியர்கள் வரை கொண்டு செல்வர். தலைமை செயலர் இந்த விஷயத்தில் கவனம் செலுத்த அறிவுறுத்தி உள்ளேன்' என்றார்.
நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், அசோக்பாபு எம்.எல்.ஏ., தலைமை செயலர் சரத்சவுகான், செயலர் பங்கஜ்குமார்ஷா, கர்மயோகி பாரத் தலைமை நிர்வாக அதிகாரி லலிதா லட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.