நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: வீரத்தமிழரசி வேலுநாச்சியார் இலக்கிய சமூக இயக்கம் சார்பில் பொங்கல் விழா அரியாங்குப்பத்தில் நடந்தது.
செயலாளர் கலைவாணி கணேசன் வரவேற்றார். நிறுவனர் கலைவரதன் தலைமை தாங்கினார். என்.ஆர். இலக்கிய பேரவை தலைவர் தனசேகரன், முக்குலத்தோர் பாசறை பொறுப்பாளர்கள் சங்கையா, ராம்குமார், அழகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இணைசெயலாளர் வெற்றிவேலன், காஞ்சனா, திவ்யாராமன், கலைவாணி சதீஷ், நித்தியா, புவனா, மதன், சுதர்சனம், குமரவேல், ஓவியா மற்றும் பலர் பொங்கல் கவிதை வாசித்தனர்.
ஏற்பாடுகளை ரத்தின விநாயகம், மனோஜ்குமார் செய்திருந்தனர்.

