தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஜிப்மரில் சிறுமிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை

ஜிப்மரில் சிறுமிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை

ஜிப்மரில் சிறுமிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை


ADDED : செப் 19, 2026 06:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 19, 2026 06:03 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ஜிப்மரில் சிறுமிக்கு முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

ஜிப்மர் குழந்தைகள் மருத்துவ துறை சார்பில், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு கடந்த ஒன்னரை ஆண்டுகளாக, டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்த 11 வயது சிறுமிக்கு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. அந்த சிறுமிக்கு, அவரின் தாய் சிறுநீரகத்தை தானமாக வழங்கினார். தற்போது, சிறுமியும், தாயும் நலமாக உள்ளனர். 

இந்த அறுவை சிகிச்சையை குழந்தைகள் மருத்துவ துறையுடன் இணைந்து சிறுநீரக மருத்துவத் துறை, சிறுநீரக அறுவை சிகிச்சை துறை, மயக்கவியல் துறை, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தீவிர சிகிச்சை பிரிவு, செவிலியர் குழுவினர், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஒருங்கிணைப்பாளர்கள், டயாலிசிஸ் தொழில்நுட்ப வல்லுநர்கள், உணவியல் நிபுணர்கள், பிசியோதெரபி நிபுணர்கள் மற்றும் இணை மருத்துவ பணியாளர்கள் ஒருங்கிணைந்து செய்தனர்.

இது ஜிப்மரில் செய்யப்பட்ட முதல் குழந்தைகளுக்கான சிறுநீரக அறுவை சிகிச்சையாகும். இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்த மருத்துவ குழுவினரை ஜிப்மர் இயக்குனர் வீர்சிங் நேகி பாராட்டினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us