ADDED : செப் 19, 2026 06:03 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ரெட்டியார்பாளையம் புதுநகரில், வாலிபர் கத்தியுடன் நின்று அவ்வழியாக செல்லும் பொதுமக்களை மிரட்டி வருவதாக ரெட்டியார்பாளையம் போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது. அதையடுத்து, போலீசார் அங்கு நின்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
அவர், ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த சூசைராஜ், 24; என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து கத்தியை போலீசார் பறிமுதல் செய்து, கைது செய்தனர்.
