/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சூப்பர் ஸ்பிளாஷ் சீரிஸ் டி-10 கிரிக்கெட் போட்டி கிங் கோலி வாரியர்ஸ் அணி முதலிடம்
/
சூப்பர் ஸ்பிளாஷ் சீரிஸ் டி-10 கிரிக்கெட் போட்டி கிங் கோலி வாரியர்ஸ் அணி முதலிடம்
சூப்பர் ஸ்பிளாஷ் சீரிஸ் டி-10 கிரிக்கெட் போட்டி கிங் கோலி வாரியர்ஸ் அணி முதலிடம்
சூப்பர் ஸ்பிளாஷ் சீரிஸ் டி-10 கிரிக்கெட் போட்டி கிங் கோலி வாரியர்ஸ் அணி முதலிடம்
ADDED : ஜன 19, 2025 06:13 AM

பாகூர்: பாகூர் அடுத்த மணப்பட்டு கிராமத்தில், கிராமப்புற வளர்ச்சி கிரிக்கெட் சங்கத்தின் சார்பில், சூப்பர் ஸ்பிளாஷ் சீரிஸ் டி -10 கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.
இப்போட்டியில், 10 அணிகள் பங்கேற்றன. இறுதி போட்டியில், கிங் கோலி வாரியர்ஸ் அணி, ஸ்விங் ஸ்ரீநாத் வாரியர்ஸ் அணி மோதின. கிங் கோலி வாரியர்ஸ் அணியினர் முதலில் பேட் செய்து 99 ரன்களை எடுத்தது.
அடுத்து களம் இறங்கிய ஸ்விங் ஸ்ரீநாத் வாரியர்ஸ் 67 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. கிங் கோலி வாரியர்ஸ் அணியினர் முதல் இடம் பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. தொடர் நாயகன் மற்றும் ஆட்ட நாயகன் விருதை கோலி வாரியர்ஸ் அணியின் பிரபு தட்டிச் சென்றார்.
ஸ்விங் ஸ்ரீநாத் வாரியர்ஸ் அணி இரண்டாம் இடம், த வால் டிராவிட் வாரியர்ஸ் அணி மூன்றாம் இடம், டேஞ்சரஸ் சேவாக் வாரியர்ஸ் அணி நான்காம் இடமும் பிடித்தன. பரிசளிப்பு விழாவில், ஜே.வி.ஆர்., மற்றும் ஏ. ஜே. கே., உரிமையாளர் வில்லியம்ஸ் ரீகன் பங்கேற்று பரிசுகளை வழங்கினார்.
புதுச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ், உதவி சார் பதிவாளர் பாலமுருகன், புதுவை பாரதியார் கிராம வங்கி காட்டுக்குப்பம் கிளையின் மேலாளர் பிரசிலா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை, கிராமப்புற வளர்ச்சி கிரிக்கெட் சங்க தலைவர் கலைநாதன், துணைத் தலைவர்கள் ஐயப்பன், சுகுமார், செயலாளர்கள் துரை, ஜெயச்சந்திரன், மஞ்சினி, மேலாளர் பார்த்திபன், பொருளாளர்கள் அருண்பிரகாஷ், சோழராஜன் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

