ADDED : செப் 02, 2025 10:05 PM
புதுச்சேரி; விநாயகர் சிலை வைப்பதில் ஏற்பட்ட பிரச்னையில், வாலிபரை கத்தியால் வெட்டிய, 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
விநாயகர் சதூர்த்தி விழாவிற்கு, முருங்கப்பாக்கத்தில் விநாயகர் சிலை வைப்பது தொடர்பாக, முருங்கப்பாக்கத்தை சேர்ந்த, ஸ்ரீ மற்றும் நவின்ராஜ் என்பவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது.
இந்நிலையில், வில்லியனுார் மெயின் ரோடு, முருங்கப்பாக்கத்தில் வைக்கப்பட்டிருந்த, விநாயகரை சிலையை, கடந்த 31ம் தேதி, புதுச்சேரி கடற்கரையில் விஜர்சனம் செய்யப்பட்டது.
அதையடுத்து, வீட்டு பொருட்கள் வாங்க, நவின்ராஜ், நேற்று முன்தினம் இரவு 9:00 மணியளவில், முருங்கப்பாக்கம் மளிகை கடைக்கு வந்தார்.
ஏற்கனவே அங்கு நின்ற ஸ்ரீ, அருண், ராகுல், தினேஷ் உள்ளிட்ட 7 பேர் கொண்ட கும்பல், நவின்ராஜை, இரும்ப பைப்பால் சரமாறியாக தாக்கினர். அதில், அருண் வைத்திருந்த கத்தியால், நவின்ராஜை வெட்டி விட்டு, அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. பலத்த காயமடைந்த, அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்தனர்.
இது குறித்து, புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, தலைமறைவாக உள்ள அருண் உட்பட 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.