UPDATED : அக் 06, 2026 12:00 AM
ADDED : அக் 05, 2026 06:37 PM
அ நிறம் | அளவு
வில்லியனுார்: வில்லியனுாரில் கத்தியுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் திரிந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வில்லியனுார் போலீசார் நேற்று முன்தினம் மாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது வில்லியனுார், கடைவீதியில் பொதுமக்களிடம் கத்தியைக் காட்டி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், போக்குவரத்துக்கு இடையூறு செய்த அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ், 24; என்பவரை கைது செய்து கத்தியை பறிமுதல் செய்தனர்.
