/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு மகளிர் கல்லுாரியில் நாக் கமிட்டி ஆய்வு
/
அரசு மகளிர் கல்லுாரியில் நாக் கமிட்டி ஆய்வு
ADDED : பிப் 19, 2025 04:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : முத்தியால்பேட்டை பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரியில் நாக் கமிட்டி ஆய்வு செய்தனர்.
முத்தியால்பேட்டையில் இயங்கி வரும் பாரதி தாசன் அரசு மகளிர் கல்லுாரி, நாக் அங்கீகாரம் பெற விண்ணப்பித்துள்ளது.
இதைத்தொடர்ந்து நாக் கமிட்டியின் சேர்மன் ஆர்.என்.சிங் தலைமை யிலான குழுவினர் நேற்று கல்லுாரியில் ஆய்வு நடத்தினர்.
ஒவ்வொரு துறையாக சென்று பார்வையிட்ட நாக் கமிட்டி அங்கு செயல்படுத்தப்பட்ட வசதிகள் குறித்து ஆய்வு செய்தனர்.
மேலும் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், பிற ஊழியர்களுடன் அவர்கள் கலந்துரையாடினர்.
நாக் கமிட்டியின் ஆய்வு இன்று 19ம் தேதி தொடர்ந்து நடக்கிறது.