/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கிருமாம்பாக்கம் அரசு பள்ளியில் கோலம், சுவர் அலங்கார போட்டி
/
கிருமாம்பாக்கம் அரசு பள்ளியில் கோலம், சுவர் அலங்கார போட்டி
கிருமாம்பாக்கம் அரசு பள்ளியில் கோலம், சுவர் அலங்கார போட்டி
கிருமாம்பாக்கம் அரசு பள்ளியில் கோலம், சுவர் அலங்கார போட்டி
ADDED : ஆக 10, 2025 08:40 AM

பாகூர்: கிருமாம்பாக்கம் அம்பேத்கர் அரசு மேல்நிலைப் பள்ளியில், கோலம் மற்றும் சுவர் அலங்கார போட்டிகள் நடந்தது.
விடுதலை நாளை முன்னிட்டு நடந்த போட்டியை, பள்ளி துணை முதல்வர் கருணாகரன் துவக்கி வைத்தார். தலைமையாசிரியை அனிதாகுமாரி முன்னிலை வகித்தார்.
இப்போட்டியில், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர்.
கோலப் போட்டியின் நடுவர்களாக ஆசிரியைகள் சண்முகபிரியா, இந்துமதி, நிவேதா ஆகியோரும், சுவர் அலங்கார போட்டிக்கு நடுவர்களாக ஆசிரியைகள் புனிதா, மாலதி, சித்ரா ஆகியோர் செயல்பட்டு, சிறந்த படைப்புகளை தேர்வு செய்தனர்.
ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் ஓம் சரவணன், பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் ரமேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.
ஆசிரியை பானுமதி நன்றி கூறினார்.