/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கூனிச்சம்பட்டு மோதல் வழக்கு: ஆதாரத்தை தேடும் சி.பி.சி.ஐ.டி.,
/
கூனிச்சம்பட்டு மோதல் வழக்கு: ஆதாரத்தை தேடும் சி.பி.சி.ஐ.டி.,
கூனிச்சம்பட்டு மோதல் வழக்கு: ஆதாரத்தை தேடும் சி.பி.சி.ஐ.டி.,
கூனிச்சம்பட்டு மோதல் வழக்கு: ஆதாரத்தை தேடும் சி.பி.சி.ஐ.டி.,
ADDED : ஜன 14, 2026 06:29 AM
புதுச்சேரி: கூனிச்சம்பட்டு மோதல் குறித்து ஆதாரம் இருந்தால் வழங்கலாம் என சி.பி.சி.ஐ.டி., அறிவித்துள்ளது.
இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி., எஸ்.பி., பழனிவேலு விடுத்துள்ள செய்திக்குறிப்பு;
திருக்கனுார் அடுத்த கூனிச்சம்பட்டு பேட் பகுதியை சேர்ந்தவர் விநாயகம்,40; இவர் கடந்த டிசம்பர் 6ம் தேதி இரவு 7:30 மணிக்கு கூனிச்சம்பட்டு ஆற்றுக்கு சென்றுவிட்டு, பைக்கில் வந்தபோது, எதிரே வந்த விழுப்புரம் மாவட்டம் ஐவேலியை சேர்ந்த பிரதாப் என்பவர் ஓட்டி வந்த மொபட் மோதியது. அதில், இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாகவும், பிரதாப்பிற்கு ஆதரவாக 4 பேர் சேர்ந்த விநாயகத்தை தாக்கியதாகவும், அதில் படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்று இறந்தார்.
இதுகுறித்து விநாயகம் மனைவி அளித்த புகாரின் பேரில் திருக்கனுார் போலீசார், வழக்கு பதிந்து பிரதாப்பை கைது செய்தனர். இந்நிலையில், குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி விநாயகம் உடலை வாங்க மறுத்து அவரது குடும்பத்தினர் மற்றும் வி.சி., கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். உள்துறை அமைச்சர் அளித்த வாக்குறுதியை ஏற்று விநாயகம் உடலை அவரது குடும்பத்தினர் வாங்கி அடக்கம் செய்தனர்.
இந்நிலையில், இவ்வழக்கின் உண்மை தன்மையை அறிய சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், சி.பி.சி.ஐ.டி., எஸ்.பி., பழனிவேலு விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
கூனிச்சம்பட்டு - மணலிபட்டு ரோட்டில் விஜய் என்பவரது நிலம் அருகே கடந்த டிசம்பர் 6ம் தேதி இரவு 7:30 மணியளவில் மொபட் மற்றும் பைக் நேருக்கு நேர் மோதிக் கொண்டது.
அதில், படுகாயமடைந்த கூனிச்சம்பட்டு காலனியைச் சேர்ந்த சாமிகண்ணு மகன் விநாயகம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்து பதிவு செய்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. வழக்கு தொடர்பாக யாரேனும் வீடியோ,புகைப்படம், ஆடியோ, மின்னணு பதிவு வைத்திருந்தால் சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தை தொடர்பு கொண்டு தரலாம். நியாயமான ,நேர்மையான விசாரணைக்காக இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

