/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரத்த பரிசோதனை நிலைய உரிமையாளர் விபத்தில் பலி
/
ரத்த பரிசோதனை நிலைய உரிமையாளர் விபத்தில் பலி
ADDED : ஜன 14, 2026 06:29 AM
புதுச்சேரி: கோரிமேடு ஜிப்மர் குடியிருப்பை சேர்ந்தவர் ராஜாராமன், 44; பட்டானுாரில் ரத்த பரிசோதனை நிலையம் நடத்தி வந்தார். இவரது மனைவி அஞ்சாலாட்சி; ஜிப்மரில் ரத்த பரிசோதனையாளராக பணியாற்றி வருகிறார்.
கடந்த 11ம் தேதி வம்புப்பட்டில் உள்ள அஞ்சாலாட்சியின் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க கணவருடன் பைக்கில் செ ன்றார். மேட்டுப்பாளையம் அருகே சென்றபோது மழை பெய்ததால் அவ்வழியாக காரில் வந்த உறவினர் ஒருவருடன் அஞ்சாலாட்சி செல்ல, அவர்களுக்கு பின்னால் பைக்கில் ராஜாராமன் சென்று கொண்டிருந்தார்.
செல்லிப்பட்டு மெயின் ரோட்டில், எதிரே வந்த டிராக்டர் ராஜாராமன் பைக் மீது மோதியது. படுகாயமடைந்த ராஜாராமன் மேல் சிகிச்சைக்காக ஜிப்மருக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர் பரிசோதித்து அவர், இறந்து விட்டதாக தெரிவித்தார். விபத்து குறித்து வில்லியனுார் போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

