நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால் : காரைக்கால் சீதளாதேவி மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோபூஜை நடந்தது.
காரைக்கால் கீழகாசாகுடி சீதளாதேவி மாரியயம்மன் கோவில் மற்றும் விநாயகர்,முருகன்,பெரியாச்சி, காத்தவராயன் மற்றும் புதிதாக அமைக்கப்பட்ட கொடிமரம் ஆகியவற்றிற்கு கும்பாபிஷேகம் வரும் 4ம் தேதி நடக்கிறது. இதனையொட்டி கடந்த 31ம் தேதி மகா கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது.
நேற்று மகாலட்சமி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், கோபூஜை, தீர்த்த சங்கிரஹணம் நடந்தது. இன்று 2ம் தேதி முதற்கால யாகபூஜை நடக்கிறது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் திருமுருகன், அறங்காவலர் குழுத் தலைவர் வல்லவராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

