sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கஞ்சா கடத்திய 2 பேர் கைது கோரிமேடு போலீசார் அதிரடி

/

கஞ்சா கடத்திய 2 பேர் கைது கோரிமேடு போலீசார் அதிரடி

கஞ்சா கடத்திய 2 பேர் கைது கோரிமேடு போலீசார் அதிரடி

கஞ்சா கடத்திய 2 பேர் கைது கோரிமேடு போலீசார் அதிரடி


ADDED : மே 09, 2025 12:13 AM

Google News

ADDED : மே 09, 2025 12:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: கோரிமேடு பகுதியில் பைக்கில் கஞ்சா கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கோரிமேடு சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு அரசு பல் மருத்துவ கல்லுாரி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது, அவ்வழியாக அதிவேகமாக பைக்கில் வந்த 2 வாலிபர்கள் பிடித்து விசாரித்தபோது, முன்னுக்கு பின் முரணாக பேசியதால், சந்தேகமடைந்து பைக்கை சோதனை செய்தனர்.

அதில், ரூ. 1 லட்சம் மதிப்பிலான 2 கிலோ 40 கிராம் கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, 2 பேரையும் போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில், பாக்கமுடையன்பேட், பக்கிரிசாமி மகன் செல்வராஜா வெங்கடஜலபதி (எ) செல்வா, 29; கோவிந்தசாலையை சேர்ந்த சார்லஸ் மகன் ஜோசப் மெச்செல்ட், 24; என்பது தெரியவந்தது.

மேலும், கோரிமேடு பகுதியில் உள்ள பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 2 கிலோ 40 கிராம் கஞ்சா பொட்டலங்கள், பைக், 2 மொபைல் போன்கள் மற்றும் ரூ. 41, 300 ரொக்கப்பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

பின்னர், அவர்கள் மீது வழக்குப் பதிந்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us