/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி கலெக்டராக குலோத்துங்கன் நியமனம்
/
புதுச்சேரி கலெக்டராக குலோத்துங்கன் நியமனம்
ADDED : பிப் 07, 2024 07:42 AM
புதுச்சேரி : புதுச்சேரி மாவட்ட கலெக்டராக குலோத்துங்கன், காரைக்கால் கலெக்டராக மணிகண்டன் நியமிக்கப்பட்டுள்ளனர்.
யூனியன் பிரதேசங்களுக்கான ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் சமீபத்தில் வெளியானது. புதுச்சேரி கலெக்டர் வல்லவன் கோவாவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், காரைக்கால் மாவட்ட கலெக்டராக பணிபுரியும்குலோத்துங்கன், புதுச்சேரி கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான ஆணை நேற்று வெளியானது.
தொடர்ந்து, அரசு செயலர் முத்தம்மாவிற்கு, சுகாதாரம், குடிமைப்பொருள் வழங்கல் துறை, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை, சமூக நலம் துறைகள் தற்காலிகமாகவும், பாண்கேர் சேர்மன் பதவி கூடுதலாகவும் ஒதுக்கப்பட்டுள்ளன.
பொதுப்பணித்துறை செயலர் மணிகண்டன், காரைக்கால் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.பொதுப்பணித்துறை, தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா துறைக்கு நிரந்தர செயலர் நியமிக்கும் வரை அரசு செயலர் ஜெயந்த்குமார் ரே தற்காலிகமாக கவனிக்கவும், ஸ்மார்ட் சிட்டி செயலாக்க அதிகாரி மற்றும் திட்ட அமலாக்கத்துறை திட்ட இயக்குநர் பொறுப்பும், அவருக்குகூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
அரசு செயலர் பங்கஜ் குமார் ஜா டில்லியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையின் உள்ளிருப்பு ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கான இடமாறுதல் உத்தரவை கவர்னர் உத்தரவின்படி,பணியாளர் நலம் மற்றும் சீர்திருத்த துறை சார்பு செயலர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ளார்.

