/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குமாரபாளையம், கோரிமேடு, லாஸ்பேட் அணிகள் வெற்றி
/
குமாரபாளையம், கோரிமேடு, லாஸ்பேட் அணிகள் வெற்றி
ADDED : அக் 07, 2024 06:17 AM

புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் கிரிக்கெட் அசோசியேசன் சார்பில், பாண்டிச்சேரி பிரிமியர் டி-20 லீக் கிரிக்கெட் போட்டி நடக்கிறது.
வீராம்பட்டினம் அபீஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த 24வது போட்டியில் குமாரபாளையம் வாரியர்ஸ், உருளையன்பேட் டைகர்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய உருளையன்பேட் அணி 19 ஓவர்களில், அனைத்து விக்கெட்களும் இழந்து 130 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய குமாரபாளையம் அணி 13 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 132 ரன் எடுத்து வென்றது. அந்த அணியின் பொற்செழியன் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
25வது போட்டியில் மூலக்குளம் கிளாடியேட்டர்ஸ், குமாரபாளையம் வாரியர்ஸ் அணிகள் மோதின. மூலக்குளம் அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து105 ரன்கள் எடுத்தது. குமாரபாளையம் வாரியர்ஸ் அணி 13 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்து வென்றது. அந்த அணியின் விக்னேஷ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
26வது போட்டியில் கோரிமேடு பேன்தர்ஸ், வீராம்பட்டினம் ஷார்க்ஸ் அணிகள் மோதின. வீராம்பட்டினம் அணி 16 ஓவர்களில் அனைத்து விக்கெட்களும் இழுந்து 89 ரன்கள் எடுத்தது. கோரிமேடு பேந்தர்ஸ் அணி 12 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 95 ரன்கள் எடுத்து வென்றது. அந்த அணியின் சபரிராஜூ ஆட்டநாயகன் விருது பெற்றார்.
27வது போட்டியில் உருளையன் பேட் டைகர்ஸ், லாஸ்பேட் லிஜெண்ட்ஸ் அணிகள் மோதின.
உருளையன்பேட் அணி 18 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 129 ரன்கள் எடுத்தது. லாஸ்பேட் லிஜென்ஸ் அணி 16 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்து வென்றது. அந்த அணியின் செந்தில்குமரன் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
ஏற்பாடுகளை டோர்னமெண்ட் கமிட்டி சேர்மன் சந்திரசேகர், நிர்வாகிகள் கணேஷ், முகிலன், குமாரவேல், கதிர்வேல் செய்திருந்தனர்.

