/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குமரி அனந்தன் மறைவு: கவர்னர் இரங்கல்
/
குமரி அனந்தன் மறைவு: கவர்னர் இரங்கல்
ADDED : ஏப் 10, 2025 04:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: குமரி அனந்தன் மறைவிற்கு, கவர்னர் கைலாஷ்நாதன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநில முன்னாள் கவர்னர் தமிழிசையின் தந்தை குமரி அனந்தன் மறைந்த செய்தியை அறிந்த கவர்னர் கைலாஷ்நாதன், தமிழிசை சவுந்தரராஜனை மொபைலில் தொடர்பு கொண்டு இரங்கலை தெரிவித்துக் கொண்டார்.
தந்தையை பிரிந்து வாடும் தமிழிசை அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, அவரது ஆன்மா அமைதி பெற வேண்டிக் கொள்வதாகவும் தெரிவித்தார்.
மேலும், முதல்வர் ரங்கசாமி, முன்னாள் முதல்வர் நாராயணசாமி, காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் குமரி அனந்தன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.