/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
லாஸ்பேட்டை கோவிலில் இன்று கும்பாபிேஷகம்
/
லாஸ்பேட்டை கோவிலில் இன்று கும்பாபிேஷகம்
ADDED : பிப் 22, 2024 06:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி, : லாஸ்பேட்டை சங்கரதாஸ் சுவாமிகள் நகரில் உள்ள நாகமுத்து மாரியம்மன் கோவிலில் இன்று கும்பாபிேஷகம் நடக்கிறது. அதையொட்டி, நேற்று கணபதி பூஜையுடன், முதல் கால யாக பூஜை நடந்தது.
இன்று காலை 5:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, 9:45 மணிக்கு கடம் புறப்பாடு; விநாயகர், முருகன், துர்க்கை, தட்சிணாமூர்த்தி, பரிவார தேவதைகளுக்கு கும்பாபிேஷகம், தொடர்ந்து, 10:45 மணிக்கு அம்மன் கோபுர கலசத்திற்கு கும்பாபிேஷகம் நடக்கிறது.
மதியம் 12:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு அம்மன் வீதியுலா நடக்கிறது. ஏற்பாடுகளை திருப்பணிக்குழு மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.