/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தளிஞ்சை காளியம்மன் கோவிலில் பிப்., 3ம் தேதி கும்பாபிேஷகம்
/
தளிஞ்சை காளியம்மன் கோவிலில் பிப்., 3ம் தேதி கும்பாபிேஷகம்
தளிஞ்சை காளியம்மன் கோவிலில் பிப்., 3ம் தேதி கும்பாபிேஷகம்
தளிஞ்சை காளியம்மன் கோவிலில் பிப்., 3ம் தேதி கும்பாபிேஷகம்
ADDED : ஜன 24, 2025 05:47 AM
புதுச்சேரி: புதுச்சேரி தளிஞ்சை காளியம்மன் கோவிலில் வரும் பிப்., 3ம் தேதி கும்பாபிேஷக விழா நடக்கிறது.
திலாசுப்பேட்டை, தளிஞ்சை காளியம்மன் கோவிலில் கும்பாபிேஷக விழா வரும், 31ம் தேதி காலை கணபதி வேள்வியுடன் துவங்குகிறது. அடுத்தடுத்த தினங்களில், காப்பு கட்டுதல், வேள்விச்சாலை பூஜைகள், தம்பதியர், லட்சுமி மற்றும் சிறார்கள் பூஜைகள் நடக்கின்றன.
பிப்., 3ம் தேதி காலை 6:00 மணிக்கு வேள்விச் சாலை பூஜைகள், கோ வழிபாடு நடக்கிறது. அடுத்ததாக, வேள்விச் சாலையில் இருந்து அம்மன் சக்தியை தெர்ப்பை நாண் மூலம், அம்மனிடம் மும்முறை கொண்டு போய் சேர்க்கும் வழிபாடு நடக்கிறது.
காலை 9:15 மணிக்கு, விமானங்களுக்கு கும்பாபிேஷகம், தொடர்ந்து அம்மன் மற்றும் இதர தெய்வங்களுக்கு கும்பாபி ேஷகம், தீபாராதனை நடக்கிறது.
விழாவில், ஆதீனம் 27வது குரு மகா சன்னிதானம் தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் மற்றும் மயிலம் பொம்ம புரம் ஆதீனம், 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் முன்னிலை வகிக்கின்றனர்.
இதில் முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம், அரசு கொறடா ஆறுமுகம் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.
விழா வரும், 30ம் தேதி துவங்கி, பிப்.,2ம் தேதி வரை தினசரி மாலையில் வாய்ப்பாட்டு, பரதநாட்டியம், இசை நிகழ்ச்சி, பட்டிமன்றம், இசை பட்டிமன்றம் உட்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

