/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வி.மாத்துார் கோவிலில் 14ம் தேதி கும்பாபிஷேகம்
/
வி.மாத்துார் கோவிலில் 14ம் தேதி கும்பாபிஷேகம்
ADDED : ஜூலை 12, 2025 03:20 AM
புதுச்சேரி: வி.மாத்துார் எல்லம்மாள் கோவில் மற்றும் பூரணி பொற்கலை சமேத வேள்வி வீர அய்யனாரப்பன் சுவாமி கோவில் கும்பாபிேஷக விழா வரும் 14ம் தேதி நடக்கிறது.
விழுப்புரம் மாவட்டம், வி.மாத்துார் கிராமத்தில், பிரசித்தி பெற்ற எல்லம்மாள் கோவில், பூரணி பொற்கலை சமேத வேள்வி வீர அய்யனாரப்பன் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில், கும்பாபிஷேக விழா வரும் 14ம் தேதி நடக்கிறது.
இதனையொட்டி, நாளை (13ம் தேதி) மாலை 4:00 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், புதிய சிலை கரிக்கோலம் நடக்கிறது. மாலை 5:00 மணிக்கு வாஸ்து சாந்தி பிரவேச பலி, அங்குராப்பணம், முதல் கால யாக பூஜை நடக்கிறது.
14ம் தேதி காலை 7:00 மணிக்கு கோ பூஜை, பிம்பசாந்தி, 9:30 மணிக்கு யாத்ராதானம் நடக்கிறது. 10:00 மணிக்கு வேள்வி வீர அய்யனாரப்பன் கோவில் கும்பாபிேஷகம், 10:20 மணிக்கு எல்லம்மாள் கோவில் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் குலதெய்வ வழிபாட்டினர், மற்றும் கிராம மக்கள் செய்துள்ளனர்.