/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சனீஸ்வரர் கோவில் சித்த குரு பீடத்தில் கும்பாபிஷேக பூஜை இன்று துவக்கம்

ADDED : ஏப் 14, 2025 06:39 AM
புதுச்சேரி : மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள தட்சணாமூர்த்தி மற்றும் 18 சித்தபீட கும்பாபிஷேக பூஜை இன்று கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது.
புதுச்சேரி - திண்டிவனம் சாலை, மொரட்டாண்டியில் 27 அடி உயர சனீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் 9 அடி உயர தட்சணாமூர்த்தி சுவாமி, 6 அடி உயரமுள்ள 18 சித்தர்கள், 27 நட்சத்திரம், 12 ராசி பீடத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும் சித்த குரு பீடத்தின்மகா கும்பாபிஷேகம்வரும்16ம் தேதி நடக்கிறது.
இதற்கான பூஜை இன்று (14ம் தேதி)காலை 8:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து, நவக்கிரகஹோமம், மகாலட்சுமிஹோமம், கோ பூஜை, ரிஷப பூஜை, அஸ்வ பூஜை, வாஸ்து சாந்தி, மிருத்துசங்கிர கணம், கும்ப அலங்காரம், பிரவேசபலி, அங்குரார்ப் பpம், முதற்கால யாக பூஜை நடக்கிறது.
நாளை (15ம் தேதி)இரண்டு மற்றும் மூன்றாம் கால யாக பூஜை, பூர்ணாஹூதி நடக்கிறது.
16ம் தேதி காலை, 6:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, மகா பூர்ணாஹூதியை தொடர்ந்து கடம் புறப்பாடாகிறது.
தொடர்ந்து, 10:00 மணிக்கு தட்சணாமூர்த்தி, 10:18 மணிக்கு 18 சித்தர்களுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. 10:30 மணிக்கு அனைத்து குருமார்களுக் கும் மகா தீபாராதனை நடக்கிறது.