ADDED : ஜூலை 05, 2026 03:21 AM
அ நிறம் | அளவு
அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் அருந்ததிபுரத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில், இன்று (5ம் தேதி) கும்பாபிேஷகம் நடக்கிறது.
விழாவையொட்டி, நேற்று விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம் மற்றும் முதல்கால யாகசாலை பூஜை நடந்தது.
நேற்று நவக்கிரக ஹோமம், மூன்றாம் கால யாகசாலை பூஜை, மூல மந்திர ஹோமம் நடந்தது.
முக்கிய நிகழ்வாக இன்று (5ம் தேதி) காலை 7:00 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை, மூல மந்திர ஹோமம், கடம் புறப்பாடு, 9:00 மணியளவில், மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளின் கோவில் விமானத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடக்கிறது.
