தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நண்பனின் வீட்டில் திருடியவர் கைது

 நண்பனின் வீட்டில் திருடியவர் கைது

 நண்பனின் வீட்டில் திருடியவர் கைது


ADDED : ஜூலை 05, 2026 03:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 05, 2026 03:16 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சாமிபிள்ளைதோட்டத்தில் நண்பனின் வீட்டில் 2 சவரன் நகையை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து, நகையை பறிமுதல் செய்தனர்.

லாஸ்பேட்டை, சாமிபிள்ளைதோட்டம், 8 வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன், 42; இ.சி.ஆரில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவர், கடந்த ஏப்ரல் 20ம் தேதி வீட்டின் அலமாரியில் தனது, 2 சவரன் கை செயினை வைத்துவிட்டு, அன்று இரவு குடும்பத்துடன் மலையனுார் கோவிலுக்கு சென்றார்.

மறுநாள் 21ம் தேதி வந்து பார்த்தபோது, அலமாரியில் வைத்திருந்த குருமாத்தை காணவில்லை. இதுகுறித்து ரவிச்சந்திரன் லாஸ்பேட்டை போலீசில் அளித்த புகாரில், தனது வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்லும், தனது மகனின் நண்பர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்திருந்தார்.

அதன்பேரில், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து ரவிச்சந்திரன் மகனின் நண்பரான சாமிபிள்ளைத்தோட்டம், விநாயகர் கோவில் தெவை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் பீமா (எ) விமல்ராஜ், 20; என்பவரை நேற்று முன்தினம் பிடித்து விசாரித்தனர்.

அவர், நகையை திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, நகையை பறிமுதல் செய்த போலீசார், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் நேற்று அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us