/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முத்துமாரியம்மன் கோவிலில் நாளை கும்பாபிேஷகம்
/
முத்துமாரியம்மன் கோவிலில் நாளை கும்பாபிேஷகம்
ADDED : ஜன 31, 2026 05:11 AM
புதுச்சேரி: அரியாங்குப்பம் காக்காயந்தோப்பு முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா நாளை நடக்கிறது.
அரியாங்குப்பம், காக்காயந்தோப்பு கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிேஷகம் நாளை 1ம் தேதி காலை 9:00 மணிக்கு மேல் 10:30 மணிக்குள் நடக்கிறது.
மயிலம் பொம்மபுரம் ஆதினம் சிவஞானபாலய சுவாமிகள் தலைமையில் கும்பாபிேஷகம் நடக்கிறது. விழாவில், முதல்வர் ரங்கசாமி, பாஸ்கர் எம்.எல்.ஏ., கலந்து கொள்கின்றனர்.
500 ஆண்டுகளுக்கு முன், அரியாங்குப்பம் அரிக்கன்மேடு பகுதியில் ஆங்கிலேயர்கள் கடல் வழியாக வணிகம் செய்ய வந்தபோது, அங்கு வசித்த வந்த 100க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நிலம் வழங்கி அங்கு வீடு கட்டி கொள்ள வழிவகை செய்தனர். அப்போது அந்த நிலத்தில் கழுத்தளவு இருந்த முத்துமாரியம்மன் சிலையை அப்பகுதி மக்கள் வேறு இடத்திற்கு மாற்றி கோவிலாக கட்டி வழிப்பட்டு வந்தனர். இக்கோவிலில் குழந்தை பாக்கியம் வேண்டியும், தீராத நோய்கள் தீரவும் அம்மனை வழிப்பட்டால் பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தனி அதிகாரி ராஜசேகரன், அறங்காவலர் குழு தலைவர் முருகையன், துணைத் தலைவர் குணசீலன், செயலாளர் பச்சையப்பன், பொருளாளர் கர்ணன், உறுப்பினர் காண்டீபன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

