நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: ரெட்டியார்பாளையம் இன்பநாதர் பஞ்சமுக லிங்கேஸ்வரர் கோவிலில், இன்று (28ம் தேதி) மகா கும்பாபிேஷகம் நடக்கிறது.
கடந்த 26ம் தேதி, கணபதி வேள்வியுடன் நிகழ்ச்சி துவங்கியது. நேற்று முன்தினம் ேஹாம மற்றும் வாசனை திரவியம், பழவகை சமர்ப்பணம், திருமுறை விண்ணப்பம், பேரொளி வழிபாடு நடந்தது. நேற்று வேள்வி நிறைவு மற்றும் கணபதி தானம் நடந்தது. இன்று காலை 6:00 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி, கோ.பூஜையும், 9:45 மணிக்கு பரிவார மூர்த்திகளுக்கு புனித நீர் ஊற்றப்படுகிறது. இன்பநாதர் பஞ்சமுக லிங்கேஸ்வரர் சுவாமிக்கு, 10:00 மணியளவில் மகா கும்பாபிேஷகம் நடக்கிறது.

