நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்: வில்லியனுார் அடுத்த ஏம்பலம் பாலமுருகன் நகரில் உள்ள சித்தி விநாயகர், பாலமுருகன், சின்ன கருப்புசாமி ஆகியே கோவில்கள் கட்டப்பட்டு கும்பாபி ேஷகம் விழா நேற்று நடந்தது.
இதையொட்டி நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி பூஜை, வாஸ்து பூஜை, முதல்கால யாகசாலை பூஜை நடந்தது. நேற்று காலை 7 மணிக்கு கோ பூஜை, இரண்டாம் காலயாக பூஜை, நாடி சந்தானம் நடந்தது. 9.40 மணிக்கு மகா பூர்ணாஹூதி, யாத்ராதானம் சங்கல்யம், 9.50 மணிக்கு கலச புறப்பாடு, 10.10 மணிக்கு மூலவர் மற்றும் பரிவாரங்களுக்கு கும்பாபிேஷகம் விழா நடந்தது.
தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை ஏம்பலம் கிராம மக்கள் செய்திருந்தனர்.