ADDED : டிச 15, 2025 06:00 AM
அ நிறம் | அளவு
நெட்டப்பாக்கம்: ஏம்பலம் முத்துமாரியம்மன் கோவில் கும் பாபி ேஷகம் விழா நேற்று நடந்தது.
நெட்டப்பாக்கம் கொம்யூன் ஏம்பலம் கிராமத்தில் அமைந்துள்ள மகா கணபதி, முத்துமாரியம்மன், சந்திரமவுளீஸ்வரர், சுப்பரமணிய சுவாமி, அய்யப்பன், வாராகி அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகள் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிேஷகம் விழா கடந்த 11ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது.
தொடர்ந்து 3 கால யாகசாலை பூஜைகள் நடந்தது.
நேற்று காலை 5.00 மணிக்கு நான்காம் கால பூஜை , கோ பூஜை, ரக்ஷாபந்தனம், நாடி சந்த னம், திரவிய ஹோமம் தொடர்ந்து, 7.00 மணிக்கு கடம் புறப்பாடு, 7.30 மணிக்கு விமானம் கும்பாபிேஷகம், 7.50 மணிக்கு முத்துமாரியம்மன் உள்ளிட்ட அனைத்து சுவாமிகளுக்கு கும்பாபிேஷகம் நடந்தது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
