
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 108 குத்து விளக்கு பூஜை நடந்தது.
புதுச்சேரி காமாட்சி அம்மன் கோவில் தெருவில், வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் 36ம் ஆண்டு அக்னி பிரவேச வைபவம் நிகழ்ச்சியொட்டி, நேற்று தை மாதம் வெள்ளிக்கிழமை மாலை 6:00 மணிக்கு 108 குத்து விளக்கு பூஜை நடந்தது.
இதில், மாங்கல்ய பலம், செல்வ செழிப்பு, குல விருத்தி, சகல தோஷ நிவர்த்தி, நோய் நிவர்த்தி கிடைக்க வேண்டி பெண்கள் குத்துவிளக்கேற்றி அம்மனை வழிபட்டனர். ஏற்பாடுகளை ஆர்ய வைசிய யுவ ஜன சேவா சங்கத்துடன் இணைந்து, கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

