தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சாலை விபத்தில் லேப் டெக்னிஷியன் சாவு 

 சாலை விபத்தில் லேப் டெக்னிஷியன் சாவு 

 சாலை விபத்தில் லேப் டெக்னிஷியன் சாவு 


ADDED : மார் 30, 2026 06:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 30, 2026 06:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகூர்: கார் - பைக் மோதிக்கொண்ட விபத்தில், படுகாயமடைந்த லேப் டெக்னிஷியன் பரிதாபமாக உயிரிழந்தார்.

கடலுார் மாவட்டம் குட்டியாங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மனைவி மணிமலா வயது 48. இவர் தற்போது, மூர்த்திக்குப்பத்தில் வசித்து வருகிறார். இவரது மகன் சசிதரன் 24; கடலுாரில் லேப் டெக்னிஷியாக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் மாலை, அதே பகுதியை சேர்ந்த முத்து 23; என்வருடன், யமகா எப் இசட் பைக்கில் கிருமாம்பாக்கம் நோக்கி சென்றுள்ளார். பைக்கை, சசிதரன் ஓட்டிச் சென்றார்.

கன்னியக்கோவில் ஸ்ரீநிவாசா கார்டன் எதிரே சென்ற போது, சாலையை கடக்க முயன்ற கியா காரின் மீது பைக் மோதியது. இதில், பைக்கில் சென்ற இருவரும் பலத்த காயமடைந்தனர். அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு, சசிதரனை மகாத்மா காந்தி மருத்துவமனையிலும், முத்துவை ஆறுடை வீடு மருத்துவமனையிலும், அனுமதித்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி சசிதரன் உயிரிழந்தார்.

புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us