/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கிருமாம்பாக்கத்தில் தொழிலாளர் தின விழா
/
கிருமாம்பாக்கத்தில் தொழிலாளர் தின விழா
ADDED : மே 02, 2025 04:58 AM

பாகூர்: கிருமாம்பாக்கத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில், தொழிலாளர்கள் தின விழா கொண்டாடப்பட்டது.
விழாவில், துணைச் செயலாளர் விஜயகுமார் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கிருமாம்பாக்கம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் கலந்து கொண்டு, ஆட்டோ சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்து தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து பேசினார். கிருமாம்பாக்கம் தொழிலதிபர்கள் முருகன், தங்கராசு ஆகியோர், ஆட்டோ சங்க அனைத்து உறுப்பினர்களுக்கும் சீருடை வழங்கி வாழ்த்தி பேசினர். துணை பொருளாளர் ராஜி, கலைவாணன் ஆகியோர் பங்கேற்றனர்.
முன்னதாக, உடல் நலக்குறைவால் உயிரிழந்த போப் பிரான்சிஸ் அவர்களுக்கும், காஷ்மீர் பஹல்காம் தாக்குதலில் பலியான பொது மக்களுக்கும், மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. விழாவில், கிருமாம்பாக்கம், பனித்திட்டு, நரம்பை கிராமங்களை சேர்ந்த முக்கியஸ்தர்கள், கிருமாம்பாக்கம் டெம்போ ஆட்டோ சங்கத்தினர்கள் கலந்து கொண்டனர்.

