/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மரத்தில் இருந்து விழுந்த கூலி தொழிலாளி சாவு
/
மரத்தில் இருந்து விழுந்த கூலி தொழிலாளி சாவு
ADDED : ஏப் 15, 2026 05:13 PM
புதுச்சேரி: கணபதி செட்டிக்குளத்தில் தென்னை மரம் ஏறிய கூலி தொழிலாளி கீழே விழுந்து காயமடைந்த சிகிச்சை பலனின்றி இறந்தார்.
கிளியனுார் அடுத்த கொஞ்சிமங்கலம், மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் பிரகாஷ், 30; கூலி தொழிலாளி. இவர், கடந்த பிப்ரவரி 22ம் தேதி கணபதி செட்டிக்குளம், கால்வாரி சர்ச் அருகே உள்ள தென்னை மரத்தில் ஏறியபோது, வழக்கி கீழே விழுந்து படுகாயமடைந்தார்.
இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் அவரை, மீட்டு, பிம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின், மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ்காந்தி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பிரகாஷ் நேற்று முன்தினம் இரவு இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், காலாப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

