UPDATED : நவ 04, 2026 12:05 PM
ADDED : நவ 04, 2026 12:03 PM
அ நிறம் | அளவு
பாகூர்: கிருமாம்பாக்கம் அருகே மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து வடமாநில தொழிலாளி இறந்தார். பீகார் மாநிலம் நாளந்தா பகுதியைச் சேர்ந்தவர் சந்திராபிந்து, 27; கூலி தொழிலாளி. இவரது மனைவி துஜா குமாரி. இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் தங்கியுள்ள கன்னியக்கோவில் குடியிருப்பில், நேற்று முன்தினம் மதுபோதையில் மாடிப்படி ஏறியுள்ளார். அப்போது, நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார்.
உடனே, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறி உள்ளனர்.
புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
