தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/நீரோடை ஆக்கிரமிப்புகளை அகற்ற எம்.எல்.ஏ., சப் கலெக்டர் நடவடிக்கை

நீரோடை ஆக்கிரமிப்புகளை அகற்ற எம்.எல்.ஏ., சப் கலெக்டர் நடவடிக்கை

நீரோடை ஆக்கிரமிப்புகளை அகற்ற எம்.எல்.ஏ., சப் கலெக்டர் நடவடிக்கை


UPDATED : நவ 04, 2026 12:05 PM

ADDED : நவ 04, 2026 12:03 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 04, 2026 12:05 PM ADDED : நவ 04, 2026 12:03 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகூர்: கிருமாம்பாக்கம் அருகே நீரோடை ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக, மோகன்தாஸ் எம்.எல்., சப் கலெக்டர் குமரன் ஆகி யோர் ஆய்வு செய்தார்.

கிருமாம்பாக்கம் அடுத்த ஆலடிமேடு, வம்பாபேட் கிராமங்களுக்கு இடையே மேற்கு பகுதியில் நல்ல தண்ணி ஆறு எனும் ஓடை செல்கிறது. பாகூர் ஏரியிலிருந்து திறந்து விடப்படும் உபரி நீர் இந்த ஓடையில் சென்று, பனித்திட்டு முத்துவாரம் வழியாக கடலில் கலக்கும். இந்த ஓடை தண்ணீரை பயன்படுத்தி, அப்பகுதி விவசாயிகள் பயிர் சாகுபடி செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தனியார் நபர் ஒருவர், ஓடையை ஆக்கிரமித்து, கருங்கற்களை காரைகளை பயன்படுத்தி பாதை அமைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. தற்போது, மழை காலம் என்பதால், நீர் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றிட வேண்டும் என, அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, பொதுப்பணித்துறை மூலம் ஓடைஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்து வந்தது.

இதற்கு, ஆக்கிரமிப்பு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பணிகள் தடைபட்டது. அப்பகுதி மக்கள் ஓடையை ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றிட மழை வெள்ள பாதிப்புகளை தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, மோகன்தாஸ் எம்.எல்.ஏ., சப் கலெக்டர் குமரன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். அப்பொழுது, பொதுமக்கள் மீண்டும் வெள்ள பாதிப்பு ஏற்படாத வகையில் ஓடையை துார்வாரிட வேண்டும் என்றனர்.

இதையடுத்து, சப் கலெக்டர் குமரன், ஆக்கிரமிப்புகளை அகற்றிட தேவையான நடவடிக்கை மேற் கொள்ள உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us