ADDED : செப் 24, 2026 07:30 PM
அ நிறம் | அளவு
நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் அடுத்த கல்மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் 42, கூலித்தொழிலாளி. இவர், கடந்த 21ம் தேதி மாலை மதுபோதையில் வீட்டில் வழுக்கி விழுந்தார். அவருக்கு தலையில் அடிப்பட்டது.
அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டிற்கு வந்தார். பின் நேற்று முன்தினம் அதிகாலை 4:00 மணியளவில் தீடிரென வயிற்று வலி ஏற்படுவதாக அவர் தெரிவித்தார். உடனே அவரை உறவினர்கள் கரிக்கலாம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து, அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். புகாரின் பேரில், நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
