ADDED : செப் 24, 2026 07:44 PM
புதுச்சேரி: அகில இந்திய அமைப்பு சாரா தொழிலாளர் காங்., உடன் இணைக்கப்பட்ட புதுச்சேரி தையல் தொழிலாளர் நல சங்கத்தின் ஆண்டு பேரவை கூட்டம் மற்றும் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு அமைப்பு சாரா தொழிலாளர் காங்., மாநில தலைவர் பிரபுராஜ் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் ஜானகி செல்வமணி துவக்க உரையாற்றினார். சங்கத்தின் நிர்வாகிகள் அந்தோணி குரூஸ், உதயசங்கர், மோகன் கிருஷ்ணன் வாழ்த்தி பேசினர்.
தொடர்ந்து, சங்கத்தின் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. பின், சங்கத்தின் புதிய நிர்வாகிகள் மற்றும் மாநிலக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
அதன்படி புதிய தலைவராக பிரபுராஜ், செயல் தலைவராக ஜானகி செல்வமணி, பொதுச் செயலாளராக வைதேகி, பொருளாளராக மீனாட்சி, துணைத் தலைவர்களாக உதயகுமார், லலிதா, இந்துமதி, துணைச் செயலாளர்களாக ஷீலா, இளவரசி, வள்ளி, மாநில குழு உறுப்பினர்களாக ஜெயந்தி, சுகன்யா, ஜானகி, தேவி, இளமதி, ராஜேஸ்வரி, நந்தினி, ரம்யா, மலர்கொடி, திவ்யா, செல்வராணி, முத்தம்மா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
