/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஏரி துார்வாரும் பணி: எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
/
ஏரி துார்வாரும் பணி: எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : ஏப் 29, 2025 11:54 PM
திருபுவனை: திருவாண்டார்கோயில் ஏரியை 39.56 லட்சம் ரூபாய் செலவில், துார் வாரும் பணி துவங்கியது.
புதுச்சேரி திருபுவனை தொகுதிக்குட்பட்ட திருவண்டார்கோயில் ஏரியின் தென்மேற்கு பகுதியை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் 39.56 லட்சம் ரூபாய் செலவில் துார் வாரும் பணியை அங்காளன் எம்.எல்.ஏ., நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முதன்மை திட்ட இயக்குனர் இஷிதாரதி, செயற் பொறியாளர் சீனிவாசன், வில்லியனுார் வட்டார வளர்ச்சி அதிகாரி தயானந் டெண்டுல்கர், உதவி பொறியாளர் ராமன், இளநிலை பொறியாளர் ராமகிருஷ்ணன், பணியாளர் ரங்கராஜ், கிராமத்திட்ட ஊழியர் குமார் மற்றும் ஊர் பொதுமக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

