/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆஞ்சநேயர் கோவிலில் லட்ச தீப தெப்பல் உற்சவம்
/
ஆஞ்சநேயர் கோவிலில் லட்ச தீப தெப்பல் உற்சவம்
ADDED : ஏப் 16, 2025 06:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார்: மணலிப்பட்டு விமல ஆஞ்சநேயர் கோவிலில், லட்ச தீபத்தை முன்னிட்டு, சுவாமி சிறப்பு அலங்காரத் தில் தெப்பல் உற்சவம் நடந்தது.
திருக்கனுார் அடுத்த மணலிப்பட்டில் செண்பகவள்ளி, கனகவள்ளி தாயார் சமேத கொண்டதாசபெருமாள் கோவிலில், விமல ஆஞ்சநேயர் சன்னதி அமைந்துள்ளது.
இக்கோவிலில், 24ம் ஆண்டு லட்ச தீப விழாவையொட்டி, நேற்று முன்தினம் காலை சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது.
மாலை 6:00 மணிக்கு லட்ச தீபத்துடன், சுவாமி சிறப்பு அலங்காரத்தில் தெப்பல் உற்சவம் நடந்தது. இதில், அமைச்சர் நமச்சிவாயம், டாக்டர் சேகர் உள்ளிட்ட திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

