தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ லட்சுமி ஹயக்ரீவர் பிரம்மோற்சவம் துவக்கம்

லட்சுமி ஹயக்ரீவர் பிரம்மோற்சவம் துவக்கம்

லட்சுமி ஹயக்ரீவர் பிரம்மோற்சவம் துவக்கம்


ADDED : ஆக 18, 2026 05:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 18, 2026 05:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவில் பிரம்மோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகரில் லட்சுமி ஹயக்ரீவர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், 55ம் ஆண்டு பிரம்மோற்சவம் நேற்று முன்தினம் துவங்கியது. மாலை அனுக்ஞை, விஷ்வக்ேஸனர் திருவீதி புறப்பாடு நடந்தது.

நேற்று (18 ம் தேதி) காலை பிரம்மோற்சவ கொடியேற்றம், இரவு லட்சுமி ஹயக்ரீவர் சந்திரபிரபை வீதியுலா நடந்தது. இதில், முன்னாள் நீதிபதி ராமபத்திரன் தாதாம் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

இன்று (19ம் தேதி) முதல் 25ம் தேதி வரை தினமும் காலை விசேஷ ேஹாமங்கள் மற்றும் இரவு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடக்கிறது. வரும் 26ம் தேதி காலை 9:00 மணிக்கு ஹயக்ரீவ ஜெயந்தி திருத்தேர், தீர்த்தவாரி, 27 ம் தேதி இரவு சுவாமி திருக்கல்யாணம் நடக்கிறது. 

ஏற்பாடுகளை வேத ஆகம சம்ரக் ஷண லட்சுமி சரஸ் மாருதி டிரஸ்ட் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us