ADDED : அக் 09, 2024 05:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர் : பாகூர் வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவிலில், நவராத்திரி விழா கடந்த 3ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது.
6ம் நாளான நேற்று லிலிதா சகஸ்கரநாம ேஹாமம் நடந்தது. இதனையொட்டி, காலை 6 மணிக்கு மூலநாதர், வேதாம்பிகையம்மன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது.
தொடர்ந்து, மாலை 6.00 மணிக்கு வேதாம்பிகையம்மன் சன்னதியில் லலிதா சகஸ்கரநாம ேஹாமம் நடைபெற்றது. இரவு 7.00 மணிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

