
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி இ.சி.ஆர். கொட்டுப்பாளையம் பகு தியில் அமைந்துள்ள நாகாத்தம்மன் கோவிலில் 15ம் ஆண்டு திருவிளக்கு பூஜை நேற்று மாலை நடந்தது. முன்னதாக காலை அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது.
மாலை 6:00 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் கொட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பெண்கள் திருவிளக்கு ஏற்றி வழிப்பட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர் சாமிநாத குருக்கள், பொருளாளர் உதயகுமார் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.

