/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நகர மயமாதலால் நில பரப்பளவு குறைந்தது: முதல்வர் வருத்தம்
/
நகர மயமாதலால் நில பரப்பளவு குறைந்தது: முதல்வர் வருத்தம்
நகர மயமாதலால் நில பரப்பளவு குறைந்தது: முதல்வர் வருத்தம்
நகர மயமாதலால் நில பரப்பளவு குறைந்தது: முதல்வர் வருத்தம்
UPDATED : செப் 12, 2025 05:57 AM
ADDED : செப் 12, 2025 03:51 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் நகர மயமாதல் காரணமாக, வேளாண் நிலங்களின் பரப்பளவு குறைந்து விட்டது என முதல்வர் ரங்கசாமி பேசினார்.
தேசிய பால் வள மேம்பாட்டு வாரியத்தின் வைர விழா மற்றும் சர்வதேச கூட்டுறவு ஆண்டை கொண்டாடும் விதமாக 'கூட்டுறவின் வளர்ச்சி' என்ற தலைப்பில் மாநில அளவிலான கருத்தரங்கம், ஓட்டல் சன்வே மேனரில் நடந்தது.
விழாவில், முதல்வர் ரங்கசாமி பேசியதாவது;
பாண்லே நிறுவனம் சிறந்த முறையில் வளர்ச்சி பெற உறுதுணையாக இருப்பது தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. புதுச்சேரி மாநிலத்தில் 104 கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் மூலம் பால் உற்பத்தி செய்யப்படுகிறது.
இது போதுமானது அல்ல. நமக்கு தினசரி சராசரியாக ஒரு லட்சம் லிட்டர் பால் தேவை. ஆனால், நமக்கு 45 ஆயிரம் முதல் 50 ஆயிரம் லிட்டர் பால் தான் கிடைக்கிறது. தேவையான பால் பிற மாநிலங்களில் உள்ள கூட்டுறவு சங்கங்களிடம் இருந்து வாங்கி வருகிறோம்.நமது விவசாயிகள் பால் உற்பத்தியை பெருக்குவதில் கவனம் செலுத்த வேண்டும். இதற்காக, பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். ஆனால், புதுச்சேரி சிறிய மாநிலம். 35 ஆயிரம் ெஹக்டர் விளை நிலங்கள் இருந்தது. நகர மயமாததால் தற்போது 10 ெஹக்டர் நிலங்கள் மட்டுமே உள்ளது.
விவசாயிகள், கறவை மாடுகளை வாங்கி பால் உற்பத்தி செய்ய அரசு உதவி செய்து வருகிறது. விவசாயிகள் கறவை மாடுகளை வாங்கி பால் உற்பத்தி செய்வது சிரமான நிலை இருந்தாலும், வாய்ப்பு இருக்கும் இடங்களில் பால் பண்ணை அமைத்து அதன் மூலம் பால் உற்பத்தியை பெருக்க வேண்டும் என்பது அரசின் எண்ணம். இதற்காக, மானியம், கால்நடை தீவனம் வழங்கல் போன்ற பல திட்டங்கள் அரசு செயல்படுத்தி வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.