/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போதிய சார்பதிவாளர்களை நியமிக்க நில வணிக உரிமையாளர் சங்கம் மனு
/
போதிய சார்பதிவாளர்களை நியமிக்க நில வணிக உரிமையாளர் சங்கம் மனு
போதிய சார்பதிவாளர்களை நியமிக்க நில வணிக உரிமையாளர் சங்கம் மனு
போதிய சார்பதிவாளர்களை நியமிக்க நில வணிக உரிமையாளர் சங்கம் மனு
ADDED : நவ 07, 2024 02:44 AM
புதுச்சேரி: உழவர்கரை, வில்லியனுார் பத்திர பதிவு அலுவலகங்களுக்கு தனித்தனியே சார் பதிவாளரை நியமிக்க வேண்டும் என, நில வணிக உரிமையாளர்கள் சங்க வலியுறுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநில நில வணிக உரிமையாளர்கள் சங்க தலைவர் பழனிசாமி, ஆலோசகர் புவனேஸ்வரன், பொருளாளர் அன்பரசு ஆகியோர் அரசு செயலர் ஆஷிஷ் மாதோராவ் மோரோவை சந்தித்து அளித்த மனு;
புதுச்சேரி அரசுக்கு வருவாய் ஈட்டி தரும் பத்திர பதிவு துறையில் போதிய சார் பதிவாளர்கள் நியமிக்கப்படவில்லை. அதிக பத்திர பதிவு நடக்கும் வில்லியனுார், உழவர்கரை பத்திர பதிவு அலுவலகங்களை ஒரே ஒரு சார் பதிவாளர் மட்டுமே பணிகளை கவனித்து வருகிறார்.
காலையில் வில்லியனுார், மாலையில் உழவர்கரை என மாறி மாறி பணிகளை கவனித்து வருகின்றார். இதனால் பத்திர பதிவுகள் மந்தகதியில் நடக்கிறது. இரண்டு பத்திர அலுவலகங்களுக்கு தனித்தனியே சார் பதிவாளர்களை நியமிக்க வேண்டும்.
இதேபோல், பத்திர பதிவு அலுவலகங்களில், இணையம் ஆமைவேகத்தில் சுழலுகிறது. காலையில் வந்தவர்கள், மாலையில் தான் பத்திர பதிவு செய்ய முடிகிறது. பத்திர பதிவுக்கு வரும் முதியோர்கள், உடல் உபாதை உள்ளவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே பத்திர பதிவு அலுவலகங்களில் அதிவேக இணைய வசதி ஏற்படுத்தி தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.