லாஸ்பேட்டை தொகுதி தி.மு.க., நுால் வெளியீட்டு விழா
லாஸ்பேட்டை தொகுதி தி.மு.க., நுால் வெளியீட்டு விழா
ADDED : ஆக 24, 2026 05:32 PM
புதுச்சேரி: லாஸ்பேட்டை தொகுதி தி.மு.க., சார்பில் நுால் வெளியீட்டு விழா நேற்று நடந்தது.
லாஸ்பேட்டை தொகுதி தி.மு.க., சார்பில் மூத்த முன்னோடி திருஞானம் எழுதி வரலாற்றில் கலைஞர் நுாலின் 3ம் பாகம் வெளியீட்டு விழா நடந்தது. புதுச்சேரி நீடராஜப்பர் வீதியில் உள்ள தனியார் ஹாலில் நடந்த நிகழ்ச்சிக்கு லாஸ்பேட்டை தொகுதி செயலாளர் தியாகராஜன் தலைமை தாங்கினார். விக்னேஷ்கண்ணன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். ராஜ்பவன் தொகுதி செயலாளர் மோகன் வரவேற்றார்.
கொள்கை பரப்பு செயலாளர் சபாபதி மோகன் நுாலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். மாநில அமைப்பாளர் சிவா நுாலை பெற்றுக்கொண்டார். எம்.எல்.ஏ.,க்கள் செந்தில்குமார், கார்த்திகேயன், மாநில துணை அமைப்பாளர்கள் அனிபால் கென்னடி, தைரியநாதன், முன்னாள் எம்.எல்.ஏ., மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் கோபால் வாழ்த்திப் பேசினர். சீனுவேணுகோபால் நுால் அறிமுகவுரையாற்றினார்.
புதுச்சேரி பல்கலைகழக தமிழ்த்துறை பேராசிரியர் ரவிக்குமார், கோவிந்தராசு ஆகியோர் நுால் ஆய்வு செய்தனர். நுாலாசிரியர் திருஞானம் ஏற்புரையாற்றினார். நிகழ்ச்சியில், தலைமைச் செயற்குழு உறுப்பினர் லோகையன், பொதுக்குழு உறுப்பினர்கள் சக்திவேல், தங்கவேலு, கோபாலகிருஷ்ணன், அமுதாகுமார், நர்கீஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
