/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
எம்.ஐ.டி., கல்லுாரியில் 'எஜூகேட் இந்தியா' தளம் துவக்கம்
/
எம்.ஐ.டி., கல்லுாரியில் 'எஜூகேட் இந்தியா' தளம் துவக்கம்
எம்.ஐ.டி., கல்லுாரியில் 'எஜூகேட் இந்தியா' தளம் துவக்கம்
எம்.ஐ.டி., கல்லுாரியில் 'எஜூகேட் இந்தியா' தளம் துவக்கம்
ADDED : நவ 24, 2024 05:21 AM

புதுச்சேரி, : எம்.ஐ.டி., கல்லுாரியில் எல் அண்ட் டி எட்யூடெக் நிறுவனத்தின் 'எஜூகேட் இந்தியா' என்ற தளம் துவக்கப்பட்டுள்ளது.
கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி) வேலை வாய்ப்புகளை வழங்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில், எல் அண்ட் டி எட்யூடெக் நிறுவனம், 'எஜுகேட் இந்தியா' என்ற விரிவான தளம் துவக்க நிகழ்ச்சி நடந்தது.
மணக்குள விநாயகர் கல்வி குழும தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன், செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன், இணைச் செயலாளர் வேலாயுதம் ஆகியோர் தலைமை தாங்கினர்.
எல் அண்ட் டி எட்யூடெக் நிறுவனத்தின் தலைமை வியூக அதிகாரி அன்புத்தம்பி, கன்ஸ்ட்ரக் ஷனின் எல் அண்ட் ஓ.டி, தலைவர் பியூலா அல்போன்ஸ், எம்.ஐ.டி.,யின் முதல்வர் மலர்க்கண், கல்லுாரி வேலை வாய்ப்புத் தலைவர் ஜெயக்குமார் ஆகியோர் தளத்தினை துவக்கி வைத்தனர்.
பல்வேறு துறைகளின் டீன்கள், பேராசிரியர்கள், அனைத்து துறை வேலை வாய்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்றனர். தளத்தில் 250க்கும் மேற்பட்ட படிப்புகள், 250 பாடநெறிகள் மற்றும் 60 வாழ்க்கைப் பாதைகள் மூலம் எம்.ஐ.டி.கல்லுாரியில் உள்ள ஒவ்வொரு மாணவரும், தங்கள் திறனைத் வளர்த்து கொண்டு, எதிர்காலத்தை வடிவமைக்க முடியும்.