/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொங்கல் சிறப்பு அங்காடி வில்லியனுாரில் துவக்கம்
/
பொங்கல் சிறப்பு அங்காடி வில்லியனுாரில் துவக்கம்
ADDED : ஜன 09, 2025 06:26 AM

வில்லியனுார்: வில்லியனுாரில் பொங்கல் சிறப்பு அங்காடி திறப்பு விழா நடந்தது.
பொங்கல் பண்டிகை முன்னிட்டு, முதல்வர் ரங்கசாமி அறிவுறுத்தலின்படி, ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, வில்லியனுார் வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் பொங்கல் சிறப்பு அங்காடி திறக்கப்பட்டது. மகளிர் சுய உதவிக் குழுவினரின் உற்பத்தி செய்த பொருட்களை நேரடியாக நியாயமான விலையில் விற்பனை செய்யும் வகையில் சிறப்பு அங்காடி மற்றும் கிராம சந்தை திறக்கப்பட்டுள்ளது.
வில்லியனுார் தனியார் திருமண நிலையத்தில் நேற்று நடந்த துவக்க விழாவிற்கு, சிவா எம்.எல்.ஏ., அங்காடியை திறந்து வைத்து முதல் விற்பனையை துவங்கி வைத்தார். நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயலர் நெடுஞ்செழியன், திட்ட இயக்குனர் அருள்ராஜன், திட்ட அதிகாரி ராதாகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அதிகாரி அன்கிட் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். சிறப்பு அங்காடியில் மஞ்சள், கரும்பு, வெல்லம், கைவினைப்பொருட்கள், செக்கு எண்ணெய் உள்ளிட்ட வீட்டு பொருட்களை, வரும் 12ம் தேதி வரை, காலை 9:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை விற்பனை செய்யப்படுகிறது.

