/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மருந்து கொண்டு செல்லும் வாகனங்கள் துவக்கி வைப்பு
/
மருந்து கொண்டு செல்லும் வாகனங்கள் துவக்கி வைப்பு
ADDED : ஆக 15, 2025 11:27 PM

புதுச்சேரி: புதுச்சேரியில் மருந்துகள் கொண்டு செல்ல எம்.பி., நிதியில் வாங்கப்பட்ட மூன்று வாகனங்களை முதல்வர் ரங்கசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
சுகாதாரத் துறை இயக்குநர், ராஜ்யசபா எம்.பி., செல்வகணபதியிடம் புதிதாக வாகனங்கள் வாங்க நிதி ஒதுக்கீடு செய்யுமாறு கோரிக்கை வைத்தார்.
அதையடுத்து, எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பில் மூன்று மருந்து கொண்டு செல்லும் 'மகேந்திரா பொலிரோ பிக்கப் வேன்' வாங்கப்பட்டு, அதில் மருத்துகளை பாதுகாப்பாக எடுத்து செல்வதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.
புதிதாக வாங்கப்பட்ட வாகனங்களை சட்டசபை வளாகத்தில் முதல்வர் ரங்கசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார். சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், செல்வகணபதி எம்.பி., அரசு கொறடா ஆறுமுகம், பாஸ்கர் எம்.எல்.ஏ., தலைமை செயலர் சரத் சவுகான், சுகாதாரத் துறை இயக்குநர் செவ்வேள், அரசு மருந்தகத் தலைவர் ரமேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தயானந்த் டெண்டோல்கர் உட்பட பலர் உடனிருந்தனர்.