ADDED : பிப் 19, 2024 05:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: மூலநோயால் அவதிப்பட்ட அயனிங் தொழிலாளி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
முதலியார்பேட்டை ஆண்டியார்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் 52, சலவை தொழிலாளி. இவர் மூல நோயால் அவதிப்பட்டு வந்தார். அவ்வப்போது அரசு மருத்துவமனைக்கு சென்று மாத்திரை சாப்பிட்டு வந்தார். இந்நிலையில் நேற்று காலை 9 மணிக்கு வலி அதிகமாகவே நைலான் புடவையால் வீட்டில் உள்ள மின்விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

