தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/சட்டம் – ஒழுங்கு மேலாண்மை ஆலோசனைக் கூட்டம்

சட்டம் – ஒழுங்கு மேலாண்மை ஆலோசனைக் கூட்டம்

சட்டம் – ஒழுங்கு மேலாண்மை ஆலோசனைக் கூட்டம்


UPDATED : நவ 12, 2026 07:44 PM

ADDED : நவ 12, 2026 07:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 12, 2026 07:44 PM ADDED : நவ 12, 2026 07:40 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் சட்டம் – ஒழுங்கு மேலாண்மை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் நடந்தது.

புதுச்சேரியில் கடந்த ஆக., 31ம் தேதி முதல் நவ., 9ம் தேதி வரையிலான 71 நாட்களில் 10 கொலைகள் நடந்துள்ள சம்பவம் பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2ம் தேதி முதலியார்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட வாணரபேட்டையில் நடந்த கொலை வழக்கில் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இதனால், சட்டம் ஒழுங்கு குறித்து பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் சட்டம்–ஒழுங்கு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கல்வித்துறை வளாகத்தில் நேற்று நடந்தது.

கூட்டத்தில், டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம், சீனியர் எஸ்.பி.,க்கள் கலைவாணன், நித்யா ராதாகிருஷ்ணன், லட்சுமி சவுஜன்யா, ராஜேந்திரகுமார் குப்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், அமைச்சர் நமச்சிவாயம், தற்போது நடந்துள்ள கொலை சம்பவங்களுக்கான காரணங்கள் மற்றும் அதனை தடுக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, இனிவரும் காலங்களில் குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும், பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள ரவுடிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தினார்.

மேலும், புதுச்சேரியின் ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் போலீசார் தொடர் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டுமென உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us