/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வழக்கறிஞர் சசிபாலன் பிறந்த நாள் விழா
/
வழக்கறிஞர் சசிபாலன் பிறந்த நாள் விழா
ADDED : ஆக 23, 2025 05:05 AM

புதுச்சேரி : உழவர்கரை தொகுதி மக்கள் சேவகரும், வழக்கறிஞர் சசிபாலன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
விழாவையொட்டி, மேரி உழவர்கரை பகுதியில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
தொடர்ந்து ரெட்டியார்பாளையம் புனித அந்திரேயா ஆலயத்தில் பிரார்த்தனையும், ரெட்டியார்பாளையம் தேவா நகரில் உள்ள தர்காவில் இறைவழிபாடு நடந்தது.
காலை 9:00 மணிக்கு கம்பன் நகர் கருணை இல்லத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.
காலை 9:30 மணிக்கு உழவர்கரை தொகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
காலை 10:00 மணிக்கு தொகுதியில் அமைந்துள்ள தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
காலை 10:30 மணிக்கு தொகுதியில் இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
மதியம் 12:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 5:00 மணிக்கு நலிந்த தொழிலாளர்களுக்கு தள்ளுவண்டி, ஊனமுற்றோர்களுக்கு மூன்று சக்கர சைக்கிள், ஆதரவற்ற மகளிர்களுக்கு தையல் இயந்திரம், அனைத்து மகளிர்களுக்கும் புடவை வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை உழவர்கரை தொகுதி சசிபாலன் பாசறையினர் செய்திருந்தனர்.