/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு
/
வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு
ADDED : பிப் 20, 2024 02:50 AM

புதுச்சேரி : சென்னை ஐகோர்ட்டில் வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டதை நினைவு கூறும் வகையில், புதுச்சேரி வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை ஐகோர்ட்டில் கடந்த 2009ம் ஆண்டு வழக்கறிஞர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தினர். அதை கண்டித்தும், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலிறுத்தியும், அந்த நாளை கருப்பு தினமாக கடைப்பிடித்து, புதுச்சேரி வழக்கறிஞர்கள் நேற்று நீதிமன்ற பணிகளை புறக்கணிப்பு செய்தனர்.
வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் குமரன் தலைமையில், மூத்த வழக்கறிஞர்கள், சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் நீதிமன்ற வளாத்தில் உள்ள வழக்கறிஞர்கள் அறையில், கருப்பு பேட்ஜ் அணிந்து புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
இதில், மத்திய , மாநில அரசுகள், வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை இயற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கீழமை நீதிமன்றங்களில் இ.பைலிங் முறையில் வழக்குகளை தாக்கல் செய்ய தகுந்த கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என வலிறுத்தினர்.

