ADDED : ஆக 06, 2025 11:23 PM
காரைக்கால்: காரைக்காலில் வழக்கறிஞர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை திரும்ப பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சென்னை ஐக்கோர்ட் மதுரை அமர்வு நீதிபதி மீது, வழக்கறிஞர் வாஞ்சிநாதன் ஐக்கோர்ட் அமர்வில் புகார் அளித்ததை தொடர்ந்து வாஞ்சிநாதன் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே மதுரை வழக்கறிஞர் மீது தொடுக்கப்பட்டுள்ள கோர்ட் அவமதிப்பு வழக்கை திரும்ப பெற வலியுறுத்தி நேற்று காரைக்கால் மாவட்ட வழக்கறிஞர் சங்கத் தலைவர் திருமுருகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது தொடுக்கப்பட்ட கோர்ட் அவமதிப்பு வழக்கை திரும்ப பெற வலியுறுத்தியும், வழக்கறிஞர்களின் பேச்சுரிமை மற்றும் எழுத்து உரிமையினை பறிக்கக் கூடாது என கோஷமிட்டனர்.
இதில் சுமார் 50க்கு மேற்பட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.